வறுமையுடன் வாழும், முல்லை மாந்தை கிழக்கு அம்பாள்புர மக்கள்!

முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை மற்றும் தொழில் வாய்ப்பின்மை காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் மாந்தைகிழக்கின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஓர் கிராமமாகக் காணப்படும், அம்பாள்புரம் கிராமத்தில் தற்போது 250 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் நிலவும் வரட்சியினால் வவுனிக்குளத்தை நம்பிய நன்னீர் மீன்பிடியும் விவசாயமும் பாதிப்படைந்துள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் ஒரு நேர உணவிற்கு கூட அல்லல்படும் நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கிராமத்தில், நுண்கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொண்டு அவற்றை மீளச்செலுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள், வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடிச்செல்லும் நிலமை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!