திருகோணமலையில் ஆசிரியர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட விசேட கல்வி அலகு ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வொன்று இன்று நடைபெற்றது.


இன்று காலை திருகோணமலை சர்வோதய வள நிலையத்தில் ஆரம்பமான குறித்த செயலமர்வினை, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் நவஜீவன நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் விசேட கல்வி பிரிவின் இணைப்பாளர் எஸ்.ஜெனார்த்தன், திருகோணமலை வலயக் கல்வி அலுவலக சேவைக்கால ஆலோசகர் கே.அகிலன் மற்றும் நவஜீவன நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் முதிதகுமார மற்றும் விடய ஒருங்கிணைப்பாளர் பியூமி இரேஸா மாவட்ட இணைப்பாளர் சுல்பிகா சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓவ்வொரு காலகட்டத்திலும் விசேட கல்விப் பிரிவில் விருத்தி செய்யவும், ஆசிரியர்களின் வாண்மை விருத்தியை ஏற்படுத்தவும் இப்பயிற்சிப்பட்டறை உறு துணையாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தேசிய கல்வியகத்துடன் இணைந்து நவஜீவன நிறுவனம் தயாரித்துள்ள வழிகாட்டல் கையேட்டினை அடிப்படையாக வைத்து இப்பயிற்சிப்பட்டறை இடம்பெறுகின்றது.

10 தினங்கள் ஒருங்கமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சிப்பட்டறையில், 5 தினங்கள் விரிவுரையும், 5 தினங்கள் செயற்பாட்டுக் கல்வியுமாக பயிற்சி அமையுமென ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!