கிளிநொச்சியில் திருக்குறள் பெருவிழா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் கீழ், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் நெறிப்படுத்தலில் முதன்முறையாக இடம்பெறும் திருக்குறள் பெருவிழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மலர்
மாலையணிவிக்கும் நிகழ்வுடன், கலாசார ஊர்வலம் இடம்பெற்றது.

கலாசார ஊர்வலம் கிளிநொச்சி கூட்டுறவுசபை மண்டபத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து, திருக்குறள் பெருவிழா இடம்பெற்றது.

திருக்குறள் பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வாக கூட்டுறவு சபை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் சிலைக்கு அரச அதிபர் மலர் மாலையணிவித்து,நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் பாடலும் இசைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற திருவள்ளுவர் விழாவில், பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் உட்பட தமிழறிஞர்கள், கல்வியலாளர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!