கூடுகிறது சு.க மத்திய செயற்குழு-எஸ்.பியின் பொருளாளர் பதவிவுக்கு ஆபத்து

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) மாலை நடைபெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான புதிய அரசியல் கூட்டணி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர், கட்சிமாநாடு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.

அத்துடன், கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து எஸ்.பி. திஸாநாயக்கவை நீக்கும் யோசனை நிறைவேற்றப்படும் என்றும், செப்டம்பர் 3 ஆம் திகதி நடைபெறும் கட்சி மாநாட்டின்போது புதிய பொருளாளர் நியமிக்கப்படுவார் என்றும் தெரியவருகின்றது.

அதேபோல் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்துகொண்ட சரத் அனுமுகம, டிலான் பெரேரா, ரெஜினோல்ட் குரே ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மத்திய செயற்குழு கலந்துரையாடப்படும்.

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான சந்திப்பு நாளை (27) நடைபெறவுள்ளது. இதன்போது கலந்துரையாடப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளது.(சே)

நன்றி சனத்

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!