அமேசான் தீயை விபத்தை கட்டுப்படுத்த 44 ஆயிரம் வீரர்கள்!!

உலகின் மிகப்பெரிய மழைக்காடாக உள்ள அமேசான், உலகிற்கு 20 சதவீத ஆக்ஸிஜனை அளித்து வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, தொடர்ந்து பல பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால், தீயை அணைப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தீ அணைப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள், ராணுவ வீரர்கள் உள்பட, 44 ஆயிரம் பேர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பிரேசிலில் தற்போது கோடைக்காலம் என்பதால், வெப்பம் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் பிரேசில் காட்டில் நிகழ்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 85 சதவீதம் அதிகம் என்றும் பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை விரைந்து கட்டுப்படுத்த வலியுறுத்தி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் போராட்டம் நடைபெற்றது. பசுமை ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அதிபர் ஜேர் போல்சனரோ அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பிரேசிலின் சுற்றுச் சூழல் அமைச்சர் ரிகார்டோ சால்லெசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். அமேசானில் ஏற்பட்டுள்ள தீ விபத்து ஒட்டுமொத்த பூமிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்தனர். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!