ஆசிரிய உதவியாளர் சம்பள பிரசிச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது- எம்.திலகராஜ்

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்கள் தமது பயிற்சியை முடித்துக்கொண்டு மத்திய மாகாண கல்வி திணைக்களத்துக்கு கொவைகளை சமர்ப்பித்து உள்ள 219 பேருக்கும் மத்திய மாகாண நிதியின் ஊடாக உரிய தரத்திலான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் உடன்பாடு தெரிவித்ததாக நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் காலத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் ஆசிரிய உதவியாளர்கள் அனைவருக்கும் எவ்வித சிக்கலுமின்றி உரிய சேவைத்தரத்தையும் சம்பளத்தரத்தையும் பெற்றுக் கொடுக்க உரிய அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பிக்க ஏற்கனவே கல்வி அமைச்சரோடு கலந்தாய்வு கூட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் இடம்பெறும் என்றும் அதற்கு மாகாண ஆளுநர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் எம்.திலகராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!