களுத்துறை விபத்தில் இருவர் பலி!

களுத்துறை மாவட்டம் பானதுறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்தொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7 மணியவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில், 20 மற்றும் 17 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பானதுறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!