உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆணைக்குழு வேண்டும் -கோட்டா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க மதகுருமார்கள் விடுத்துள்ள வேண்டுகோளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஆயர்களின் அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (25) அறிக்கையொன்றை வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, பயங்கரவாத தாக்குதலால் கத்தோலிக்க மதகுருமார்களின் வேதனையை தன்னால் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற துன்பியல் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் தான் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

இதேவேளை இவர்களின் இந்த வேண்டுகோளை தமது அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்ததும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதுடன், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் அற்ற நாட்டுக்குள் மக்கள் சுந்திரமாக வாழும் நிலைறை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

.அந்த அறிக்கையில் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முழு நாட்டையும் துன்பத்துக்கு உள்ளாக்கி அப்பாவி மக்களை உயிர்களை காவுகொண்டு, பலர் மோசமான முறையில் காயமடைவதற்கு காரணமாக அமைந்த மோசமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமை காரணமாக கத்தோலிக்க மதகுருமார்கள் அடைந்துள்ள அசௌகர்யம் மற்றும் துன்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!