இணைந்து செயற்பட தயார் : பூ.பிரசாந்தன்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்க, இணைந்து செயற்பட தயார் என, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழ் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு, மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில், இன்று மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு சின்னத்தின் கீழ், எதிர்கால அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவும், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவதற்கான முன்னெடுப்பாக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், கிழக்கு தமிழ் ஒன்றிய தலைவர் சிரேஸ்ட் சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் தலைமையிலான குழுவினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையிலான உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!