ராஜித சேனாரத்ன மீது, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை சுகாதார அமைச்சில் நியமித்துள்ளதாகவும், அது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடத்தில் முறையிடவுள்ளதாகவும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சங்க தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தனிச்சையான செயற்பாடுகளின் நிமித்தம், சுகாதார அமைச்சினுள் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளடங்கலாக, 13 இடங்களில் முறைப்பாடு செய்துள்ளோம். அவர் மீது நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை ஆகும்.

இவ்வாறானதொரு நிலையில், சுகாதார அமைச்சர் தமது அமைச்சிற்கு 29 பேரை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!