எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய மாற்றம் ஏற்படும் : ஹேஷா விதானகே எச்சரிக்கை

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை உத்தியோகப்பூர்வமாக, எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்காவிடின், கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், மாற்று தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என, பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனநாயக தேசிய முன்னணி, இம்மாதம் 30 ஆம் திகதி உதயமாகவுள்ளது. இதன் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை, ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், கோரிக்கையை எழுத்து மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக உள்ள, நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக, எங்களின் பதவிகளை இழக்கவும் தயாராக இருக்கிறோம்.

மாத இறுதிக்குள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படா விட்டால், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்குவதற்காகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்வதற்காகவும், நாங்கள் மாற்று தீர்வுகளை எடுக்க வேண்டி நேரிடும். என பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!