அட்டாளைச்சேனையில், கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்டிருந்த, ஆடு, மாடு அறுக்கும் தளமான கொல்களத்தினை மக்கள் குடியிருப்பு அற்ற பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


அட்டாளைச்சேனை, பத்தமாரி எனும் பிரதேசத்தில் சுமார் 50 இலட்சம் ரூபா செலவு மதிப்பீட்டில் அமையப்பெறவுள்ள இக்கட்டடத்தின் முதற்கட்டப் பணிக்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை 20 இலட்சம் ரூபா நிதியினை யொதுக்கீடு செய்துள்ளது.

பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இதற்கான அடிக்கல்லினை நட்டி வைத்தார்.

நிகழ்வில், பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்;, பிரதே செயலாளர்களான ஜே.லியாகத் அலி, எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இணைந்து இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தற்போதுள்ள கொல்களம் அமைந்துள்ள பிரதேசத்தில் மக்கள் குடியேற்றம் அமைந்து வருவதனால் நாளாந்தம் பல்வேறுபட்ட சுகாதார சீர்கேடுகளுக்கும், துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அசொளகரியங்களுக்கும் ஆளாகிவருகின்றனர்.

இதனையடுத்தே, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், பிரதேச சபை தீர்மானங்களுக்கு அமைய பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் இதன் போது குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!