புதிய அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும் : பிரதமர்

நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி வலுவூட்ட வேண்டும் எனவும், அதற்கான காலம் தற்பொழுது உருவாகியுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில், அங்கும்புர நகரில், மக்களுக்கான அபிவிருத்தி திட்ட நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் வெடித்த குண்டுடன், எல்லாம் முடிந்து போய் விட்டது என்று சிலர் நினைத்தனர்.
பொருளாதராமும் அரசாங்கமும் முடிந்து விட்டன என்றும் நினைத்தனர்.

சுற்றுலாத்துறை உடைந்து வீழ்;ந்;தது. இன்னும் இரண்டு வருடங்கள் எடுக்கும் என்றனர். முன்னர் குண்டு வெடித்தால் அப்படித்தான் நடந்தது.

தற்போது என்ன நடந்துள்ளது. பிழை செய்தவர்களை இரு மாதங்களுக்குள் கைது செய்தோம். பொருளாதாரம் மெல்ல மெல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது.

சுற்றுலாத்துறை குறைந்தது. அதுவும் ஒரு வருடம் ஆகுவதற்கு முன்னர், சுற்றுலாத்துறையில் இருபது இலட்சம் வெளிநாட்டவர்கள் இலங்கை வருகை தந்துள்ளார்கள்.

கடந்த வருடம் சுற்றுலாத்துறையில் வருகை தந்தோர் தொகை 23 இலட்;சம் ஆகும். நாங்கள் இதில் இருந்து நாங்கள் முன்னோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் இருக்க முடியாது. இந்த அரசியல்வாதிகளும் இருக்க முடியாது. நாங்கள் இளைஞர்களிடம் கேட்பது என்ன செய்ய வேண்டும் என்று ஆகும்.

எங்களுக்கு புதியது தேவை. இந்தப் பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் வேண்டாம். புதிதாகச் சிந்தித்து புதிய எதிர்காலத்தை உருவாக்குங்கள்.

எங்களுக்கு இருக்கும் எதிர்காலத்தை உருவாக்குங்கள். அதில் விட்டுச் செல்ல முடியாது. நாங்கள் செய்த பிழைகளை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் செய்ததை திருத்திக் கொள்ளப் பார்க்க வேண்டும். எங்களுக்கு அடுத்து இருப்பது தொழில் வழங்குவதாகும்.

ஜனநாயகத்தை உறுப்படுத்தி மேலும் வலுவூட்ட வேண்டும். அதற்கான காலம் வந்திருக்கிறது. சம்பிரதாய அரசியலை இல்லாமற் செய்து, நாங்கள் புதிய அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில், அங்கும்புர நகரில் 30.3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட, பேரூந்து நிலையம், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 285 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள, அங்கும்புர – கெப்பிட்கல காபட் வீதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும்;, சிறப்பாக நடைபெற்றது.

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதமர் ரனில் விக்ரமசிங்க அதிதியாக கலந்துகொண்டு, திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில், அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, அமைச்சர் லக்ஷ்மன் கிhயெல்ல உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!