திருமலையில், ஐ றோட் திட்டம்

கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும், ஐ றோட் திட்டத்தின் கீழ், 216 கிலோ மீற்றர் நீளமான 124 வீதிகளை ஆரம்பிக்கும் நிகழ்வின் அங்குராப்பண நிகழ்வு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நேற்று மாலை திருகோணமலை மூதூர் 3 சி.டி சந்தியில் இடம்பெற்றது.


நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரி கபீர் காசிம், பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஃறுப், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.துரைரெட்னசிங்கம், இம்ரான் மஃறுப், எம்.எஸ்.தௌபீக் ஆகியோரின் பங்குபற்றலுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டதின் கீழ், இரு கிராமங்களை இணைக்கும் வீதி அபிவிருத்தி புனரமைப்பு மற்றும் பராமரிப்பு என்பன நடைபெற்று வருகின்றன.

இதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி முதற்கட்டமாக 800 மில்லியனும், இரண்டாம் கட்டத்திற்கு 900 மில்லியனும் வழங்குகின்றது.

நாடளாவிய ரீதியில், 7 ஆயிரத்து 180 கிலோ மீற்றர் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!