மட்டு, பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு திராய்மடு பனிச்சையடி அனைத்துலக நாடுகளின் அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.


கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவில் நேற்று மாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் நடைபெற்றது.

ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியினை கிழக்கு பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்தந்தை எ.நவரெட்ணம் தலைமையில் பங்கு தந்தை அன்டன் ஜெயராஜ், அருட்தந்தை கிரைட்டன் அவுட்ஸ் கோன், அருட்தந்தை ஜெரிஸ்டன் லொயிட் ஆகியோர் இணைத்து ஒப்புகொடுத்தனர்.

ஆலய திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் கொடியிறக்கும் நிகழ்வு ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றதுடன் அன்னையின் திருச்சொரூப ஆசிர்வாதமும் இடம்பெற்றது, இந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை 2004 ஆம் ஆண்டு, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை, திராய்மடு மற்றும் பனிச்சையடி பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட போது உறவுகளை இழந்த நிலையில் வாழ்ந்த மக்களை ஆன்மீக பாதையில் கொண்டு செல்ல 2006ஆம் ஆண்டு அருட்தந்தை எ.நவரெட்ணம் அடிகளாரினால் அனைத்துலக நாடுகளின் அன்னை என்ற பெயரில் ஆலயத்தினை நிர்மாணித்து அப்பகுதி மக்களை வழிநடாத்தி வந்தார்.

13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று ஆலயத்தின் திருவிழா சிறப்பிக்கப்பட்ட போது இந்த ஆலயத்தினை நிர்மாணித்த அருட்தந்தையும் குருத்துவ வாழ்வில் வெள்ளி விழாவினை கொண்டாடும் அருட்தந்தையுமான எ.நவரெட்ணம் அடிகளாரை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று ஆலயத்தில் நடைபெற்றது.

தெடர்ந்து மறைக்கல்வி பாடசாலையில் நாடாத்தப்பட்ட மறைக்கல்வி போட்டி பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பதக்கங்களும் அருட்தந்தையர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!