திருமலை மூதூரில் படுகொலை நினைவேந்தல்

2006 ஆம் ஆண்டில், திருகோணமலை மூதூரில் படுகொலை செய்யப்பட்ட, பிரான்ஸ் நிறுவன ஊழியர்களின், 13 ஆவது நினைவேந்தல், இன்று அனுஸ்டிக்கப்பட்டது.


2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி, பசிக்கு எதிரான பிரெஞ்சு நாட்டு நிறுவனத்தை சேர்ந்த 17 ஊழியர்கள், திருகோணமலை மூதூர் பகுதியில், கொடுரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊழியர்களின் நினைவு தினம், இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

திருகோணமலை கத்தோலிக்க மடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், தென் கையிலை ஆதினம் சுவாமி, திருகோணமலை மறை மாவட்ட முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, அரசியல் ஆய்வாளர் யதீந்திரா மற்றும் உயிரிழந்த தொண்டர் பணியாளர்களின் உறவினர்கள், திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!