மக்கள் விரும்பும் வேட்பாளர் அவசியம் : சமீர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை வெற்றி கொள்ளக்கூடிய வகையில், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என, தேசிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று, நுவரெலியா ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தேசிய மக்கள் ஒன்றிய உறுப்பினர்களான டானியல் ஜெனாஸ்டர், தியாகராஜா கலைச்செல்வன், டிலான் பெரேரா ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
இதில் கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சமீர பெரேரா.

இன்று, ஜக்கிய தேசிய கட்சியில் மக்கள் ஆதரவு இருக்கின்றவர்களுக்கு வாய்ப்பை வழங்க மறுப்புதெரிவிக்கின்றனர். ரணில் விக்ரமசிங்க கூறுகிறாம். என்னிடம் தொல்லை கொடுத்தால் ஜானாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவுக்கு வழங்குவதாக.

ரணில் விக்ரமசிங்கவிடம் ஒன்று கேட்கிறேன். ஜனாதிபதி வேட்பாளர் உங்களது உறவினரா? இல்லை. அவர் கடவுளா? அவருக்கு தேவைப்படுவோர்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் வழங்க.
மக்கள் யாரை கோருகிறார்களோ அவர்களுக்கே வழங்க வேண்டும்.

மக்கள் விரும்புகிறார்கள் சஜித் பிரேமேதாச அவர்களை. ஏன் சஜித்துக்கு பயப்படுகிறீர்கள். எமக்கு வேண்டும் கோட்டபாய முதல் ராஜபக்ஸ அரசியல் வரலாற்றை தோற்கடிக்க வேண்டும்.
அவர்களை தோற்கடிக்க முடியும் சஜித் பிரேமேதாசவிற்கு மாத்திரம். ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவை நிறுத்த முயற்சிக்கிறார்கள்.

நாங்கள் கௌரவத்துடன் கரு ஜயசூரியவிற்கு ஒன்று கூறுகிறோம். தாங்கள் 52 நாள் அரசாங்கம் இருந்த போது, ஜனநாயகத்தையும் இந்த நாட்டு மக்களையும் பாதுகாத்தீர்கள்.
உங்களுக்கான பொறுப்பு மக்களோடு இருக்க வேண்டும்.

நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுடைய வெற்றிக்கு காரணமாக இருக்க வேண்டாம். தாங்கள் அந்த இடத்திற்கு செல்லக்கூடாது. சென்று வரலாற்றில் காட்டிக் கொடுத்தவர் என்ற பெயருக்கு ஆளாக வேண்டாம்.

தாங்கள் மக்களோடு இருங்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். மக்கள் கோரும் வேட்பாளரை தெரிவு செய்யுங்கள். அதனை தாங்கள் மீறினால் கோட்டபாய ராஜபக்சவோடு இணைந்து தோற்கடிப்போம்.

நாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். தம்பி ஜனாதிபதி, அண்ணன் பிரதமர், நிதி அமைச்சர் மற்றுமொரு தம்பி, மகன் விளையாட்டுத்துறை அமைச்சர். இந்த குடும்ப அரசியலுக்கு நாங்கள் தினந்தோறும் எதிர்ப்பு. ஆகையால் தான் நாங்கள் கூறுகிறோம், மாமா ஜனாதிபதியாகி மருமகன் பிரதமராக ஆக விடவும் மாட்டோம். அதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.

மலையக பெருந்தோட்ட மக்கள் சஜித் பிரேமேதாசவை தவிர்த்து வேறு எவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். சஜித் பிரேமேதாசவிற்கு ஆதரவு வழங்குமாறு, மலையகத்தில் உள்ள அரசியல் தலைவர்களிடம் கோருகிறோம்.

அதனை அவர்கள் மறுத்தால், அவர்களுடைய வேண்டுகோள் இன்றி மலையக மக்கள் சஜித் பிரேமேதாசவோடு ஒன்றிணைவார்கள். ராஜபக்ஸ ஐனநாயகத்தை ஏற்றுக்கொண்டவர் இல்லை.
அவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.

இன்று ஊடகவியலாளர்கள் அவர்களிடம் கேள்வி ஏழுப்பமுடியாது. கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர்களை ராஜபக்ஸ விட்டு வைத்தது இல்லை. அவர்கள் வழங்குவதை சாப்பிட்டு, வேறு எதையாவது பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.

யுத்தத்திற்கு பின்னர், 18 ஆவது அரசியலமைப்பு சட்டத்தை கொண்டுவந்து, ஜனநாயகத்தை இல்லாது செய்தார்கள். யுத்தம் நிறைவடையும் தருவாயில்தான் லசந்த விக்ரதுங்கவை கொலை செய்தார்கள்.

யுத்தத்திற்கு பிறகுதான் கொழும்பு பகுதியில் உள்ள இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள். யுத்தத்திற்கு பிறகுதான் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். எக்னலிகொட போன்றோர் காணாமல் போனார்கள். என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!