அம்பாறையில், ஜே.வி.பி ஜனாதிபதி வேட்பாளரின் சுவரொட்டிகள்!

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.


தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் நம்பிக்கை தரும் நம்பகரமான வேட்பாளர் என குறிப்பிட்டு கல்முனை நகரப்பகுதி, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!