வவுனியாவில், பண்டாரவன்னியனின் 216வது நினைவு தினம் அனுஸ்டிப்பு

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216 ஆவது நினைவு தினம், இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.


வவுனியா நகரசபையும், பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து வருடாந்தம் அனுஸ்டித்து வரும் நிலையில், இன்றையதினம் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றன.

காலை 8.15மணிக்கு வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், பண்டாரவன்னியனினது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாக இருந்தவருமான மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின் இறுதியில் கவிஞர் அகளங்கனால் நினைவுரை நிகழ்தப்பட்டிருந்து.

இதனையடுத்து வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றன. தலைமை உரையை தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததுடன், அதனை தொடர்ந்து நினைவுப்பேருரையை மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை நிகழ்தியதுடன் உரையோவியத்தை எழுத்தாளர் தமிழருவி த.சிவகுமாரன் வழங்கியிருந்தார்.

நகரசபை தவிளார் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக சட்டத்தரணியும் முன்னாள் வவுனியா மாவட்ட சபை தலைவருமான மு.சிற்றம்பலம் கலந்துகொண்டதுடன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோதாரலிங்கம், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்ருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!