நாடடின் பாதுகாப்பை உணர்த்த மாணவர்கள் இருவர் நடை பயணம்!

ஈஸ்டர் தாக்குதலின் பின் இலங்கை மீண்டும் பழைய நிலமைகளுக்கு திரும்பியுள்ளது என சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் முகமாக, தமிழ் மாணவர்கள் இருவர் நடைபயணம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களால், இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்ற நிலை சர்வதேச ரீதியில் எழுந்துள்ளது.
அதனை மறுதலிக்கும் நோக்குடன், இலங்கை பாதுகாப்பான நாடு என்பதை உறுதிப்படுத்தும் முகமாக பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திரமுனை நோக்கி இரு மாணவர்கள் நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நடை பயணத்தை நேற்றைய தினம் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பித்த மாணவர்கள், நேற்று கிளிநொச்சியை வந்தடைந்திருந்தனர்.
இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் கிளிநொச்சியில் டிப்போ சந்தியில் இருந்து, தெய்வேந்திரமுனை நோக்கிய பயணத்தை குறித்த இரு மாணவர்களும் ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் வவுனியா புளியங்குளத்தில் நிறைவடைந்து, மீண்டும் நாளை புளியங்குளத்தில் இருந்து தெய்வேந்திர முனைநோக்கிய பயணத்தை மாணவர்கள் ஆரம்பிக்கவுள்ளனர்.
மாணவர்களின் நடைபயணத்திற்கு பொது மக்கள் ஊக்கமளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!