கண்டி – நுவரெலியா வீதியில் விபத்து : ஒருவர் பலி

கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.


கண்டி நகரிலிருந்து கொத்மலை புரட்டாசி பகுதியை நோக்கி நேற்று இரவு பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 20 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி கட்டுகஸ்தோட்டை ஜம்புகாபிட்டிய பகுதியைச் சேர்ந்த திலின சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!