தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இது குறித்த அறிவிப்பு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கான திகதி மற்றும் நேரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திகதி கொடுத்தால், அதன் பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத் தெரிவுக் குழு முன் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத் தெரிவுக் குழு முன் ஆஜராக மாட்டேன் என அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதி பாராளுமன்றத் தெரிவுக் குழு முன் ஆஜராகாவிட்டாலும் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் ஆயுட் காலம் ஆகஸ்ட் 23 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், அது செப்டம்பர் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!