கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு!

இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து தீவிரவாதிகள் நாட்டிற்குள் வருவதனையும், வெளியே தப்பித்துச் செல்வதனையும் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஆறு உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தின் கோவை உட்பட பல மாவட்டங்களில் பெரும் பதற்ற நிலலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர், ‘இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று கூறினார்.

ஏனெனில் கடலோரத்தின் பாதுகாப்பு முன்னரை விடவும் ஏப்ரல்-21 குண்டுத் தாக்குதலின் பின்னர் பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையினர் தெடர்ந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

இவ்வாறானதொரு நிலையில் கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கு எந்த வாய்ப்புக்களும் இல்லை என்றும், தீவிரவாதிகள் இந்தியாவினுள் நுழைந்துள்ளமை தொடர்பாக எத்தகைய உத்தியோகப்பூர்வ தகவலும் தமது உளவுத் துறையினருக்கு கிடைக்கவில்லை என்றும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!