இந்திய பிரதமருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஓர்டர் ஒஃப் சயீத் விருதை அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் மோடிக்கு வழங்கினார்.

5 நாட்கள் வெளிநாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.

இதன்போது பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் இருதரப்பு, பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தினார்.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஓர்டர் ஒஃப் சயீத்’ விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் வழங்கினார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!