ஹொங்கொங்கில் பதற்றம்!

ஹொங்கொங்கில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல் நிலை ஏற்பட்டதை அடுத்து கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹொங்கொங்கில் 12ஆவது வாரமாக போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், குவாங் டோங் பகுதியில் நேற்றைய தினம் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கானோர் தங்கள் முகங்களை முகமூடிகளால் மறைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர்.

எனினும் பதிலுக்கு போராட்டக்காரர்களும் தங்கள் கைகளில் கிடைத்த ஆயுதங்களால் பொலிஸாரைத் தாக்கியதால் அங்கு பதற்றம் நிலவியது.

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்படுவோரை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கான கைதிகள் பரிமாற்ற சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!