இஸ்லாமிய இயக்கங்கள் மீதானதடை தொடர்ந்து நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதலிற்கு பின்னர் தடைவிதிக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை தொடர்ந்து அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்தஞாயிறு தினத்தன்று மத வழிபாட்டிடங்கள் மற்றும் விடுதிகள் மீது
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடாத்தியிருந்தது.

இதனையடுத்து, இலங்கையில் காணப்படும் இஸ்லாமிய இயக்கங்கள் சிலவற்றினை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடைவிதித்தது.

குறித்த தடையுத்தரவானது, அவசரகாலச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலும், தொடர்ந்து அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!