வட கொரியாவால் இரு ஏவுகணைகள் இன்று பரிசோதனை

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில், வட கொரியா இன்றும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது.

இரண்டு சிறிய ரக ஏவுகணைகளை, இன்று கடலில் செலுத்தி பரிசோதனை செய்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள், அதிகபட்ச வேகத்தில் 380 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து, 97 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து, கிழக்கு கடல் பகுதியான ஜப்பான் கடலில் விழுந்துள்ளது என, தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில், அமெரிக்க மற்றும் தென் கொரிய படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதை எச்சரிக்கும் விதமாக, வட கொரியா இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஏவுகணை பரிசோதனை நடத்தியிருந்தது.

இதனால், பதற்ற நிலை உருவாகியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!