அமேசன் காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஆயுதப் படை

பிரேசில் நாட்டில் உள்ள அமேசன் காடுகளில், பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ, ஆயுதப் படைகளை அனுப்ப, பிரேசில் ஜனாதிபதி போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார்.

இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுகின்றனர்.

அமேசன் தீ கட்டுப்படுத்தப்படும் வரை, பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமுலாக்கப் போவதில்லை என, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.

பிரேசிலில் இருந்து, மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு, ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.

இதேவேளை, உயிர் இருக்கும் வரை, அமேசன் காட்டை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என, பிரேசிலின் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன், அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள், தங்கள் உடல்களில் நிறங்களை தீட்டியவாறு, அம்பு மற்றும் ஏனைய ஆயுதங்களுடன், காடுகளை அழிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரேசிலின் அமேசன் மழைக்காடுகள், அமோஜோனஸ் மாவட்ட மாநிலத்தில், சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முரா பழங்குடியினத்தவர்கள் வாழ்கின்றனர்.

முரா பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், தங்கள் கிராமங்களை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுள்ள பாரிய காடழிப்புகளை, ஊடகவியலாளர்களுக்கு காண்பித்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும், காடுகள் அழிக்கப்படுவதையும், மரங்கள் வெட்டப்படுவதையும் ஆக்கிரமிப்பையும் பார்க்கின்றோம் எனவும், அழிவு நெருங்கிவருவதை காண்கின்றோம் எனவும், பழங்குடியின தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!