கம்பளையில் தடம்புரண்டது புகையிரதம்!

கண்டியில் இருந்து எல்ல நோக்கி சென்ற விசேட புகையிரதம் ஒன்று, கம்பளை – உலபனே இடையேயான பகுதியில் தடம்புரண்டது.

இச்சம்பவம், இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால், அப்பகுதி ஊடான, மலையக பகுதிக்கான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டது.

தடம் புரண்ட புகையிரதத்தில், அதிகளவான சுற்றுலாப்பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

தடம்புரண்ட புகையிரதத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில், புகையிரத சேவையை வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!