மட்டக்களப்பு மாணவர்கள் நடைபயணம்

ஏப்ரல் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், இலங்கையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில், மட்டக்களப்பை சேர்ந்த மாணவர்கள் இருவர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த, 18 வயதுடைய சஞ்ஜீவன் மற்றும் 19 வயதுடைய ஜொசாந்த் ஆகிய இருவரும் நடைபயணத்தை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில், பருத்தித்துறை வெளிச்ச வீடு பகுதியில் இருந்து, இன்று காலை காலை 7.00 மணியளவில் ஆரம்பித்த நடைபயணம், பருத்தித்துறை – மருதங்கேணி வீதி ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!