பொகவந்தலாவயில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து

நுவரெலியா பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொகவந்தலாவ லொய்னோன் தோட்டப் பகுதியில், குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயினால், குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதனால், சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்களும் தீயில் கருகியுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 10.00 மணியளவில், குடியிருப்பில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தோட்ட பொது மக்கள் இணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், நோர்வுட் பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும், மலையக மக்கள் முண்ணனியின் மத்திய குழு உறுப்பினரும் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.உதயகுமாருக்கும், பாதிக்கப்பட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!