மனித, தொழிலாளர் உரிமை மீறல் தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையில் மனித மற்றும் தொழிலாளர் உரிமை மீறல் தொடர்பான குழுவின் கலந்துரையாடல் ஒன்று, வவுனியாவில், இன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது, வவுனியா வடக்கில் பெருன்பான்மை இனத்தவரின் ஆக்கிரமிப்பு, வடக்கில் தமிழ் மொழி புறக்கணிப்பு, தமிழர்களின் பூர்வீக இடங்களை தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பது, வவுனியாவில் பொது மக்கள் அதிகமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள், வரிச்சலுகை தொடர்பான அறிக்கையிடல், அதுசார்ந்த தெளிவுத்தன்மை, வவுனியா மாவட்டத்தின் தற்காலிக நிலைமைகள், மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெற்று வரும் இந்த கலந்துரையாடலில், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!