யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின், யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம், இன்று அதிகாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில், கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் திறந்து வைக்கப்பட்ட அலுவலகம், காலையிலேயே பூட்டப்பட்டுள்ளது.

காணமல் போன அலுவலகம், யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அலுவலகம் இங்கு திறக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்ட காணாமல் போனவர்களின் உறவுகளின் அமைப்புக்கள், அவ்வாறு திறக்க முற்பட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில், சபாநாயகர் கரு ஐயசூரிய மற்றும் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் இணைந்து திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த அலுவலகம், 10.30 மணியளவில் திறந்து வைக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இரகசியமான முறையில், இன்று அதிகாலை 6.30 மணியளவில், சபாநாயகர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றல் இல்லாமல், காணாமல் போனோர் அலுவலக பணிப்பாளர் சாலிய பீரிஸ், அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த அலுவலகத்தை திறப்பதற்கு, காணாமல் போனோரின் உறவினர்கள் எதிரப்பை வெளியிட்டிருந்த நிலையிலேயே, அலுவலகம் இரகசியமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அதிகாலையில் இரகசியமாகத் திறந்து வைக்கப்பட்ட அலுவலகம், காலையிலேயே பூட்டப்பட்டிருந்தது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!