காணமல் ஆக்கப்பட்டோர் குறித்த இறுதித் தீர்மானத்தை அரசே எடுக்கும்-சாலிய பீரிஸ்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கினாலும், அரசாங்கம் இறுதி முடிவை தீர்மானிக்கும் என, அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை மட்டும் வழங்க முடியும் எனவும், ஆனால் சில விடயங்களில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும், அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பான மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதில் உறவினர்களால், சில பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள் கூறப்பட்டு, அவர்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், நாம் அவ்வாறான அதிகாரிகளை, விசாரணைகள் முடியும் வரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யுமாறு, அரசுக்கு பரிந்துரை செய்தோம்.

எனினும் அவர்கள் தற்போதும் பதவிகளில் இருப்பதாக, சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகமாகிய நாம், அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்.

இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கே உண்டு.
சாதாரணமாக பொது மக்கள் சேவகர் ஒருவர் குற்றம் இழைத்தால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள், விசாரணை செய்து முடியும் வரை, அவரை தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்க்குவது வழக்கம்.

அதே முறைமையை இங்கும் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் நியமனம், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கைகளில் உள்ளன.
அதில் எம்மால் தலையிட முடியாது.

இந்த விடயத்தில் பரிந்துரை வழங்க மட்டுமே எமக்கு முடியும்.
அதற்காக நாம் பரிந்துரைகளை மட்டும் செய்யும் பணியகம் என்று கருத வேண்டாம்.
இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், காணாமல் ஆக்கப்பட்டவருக்கு உண்மையில் என்ன நடந்தது? என்பதை கண்டறிய முழுமையான விசாரணை செய்வதே.

அந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு, குற்றம் சுமத்தப்படும் தரப்புக்களை விசாரணை செய்ய முடியும்.
எல்லா விடயத்திலும் தலையிட அதிகாரங்கள் இல்லாது போனாலும், சில விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்ள, எமக்கு என சில அதிகாரங்கள் உள்ளன.

எமது அலுவகத்தின் பிரதான நோக்கம், காணாமல் போனவருக்கு உண்மையில் என்ன நடந்தது என தேடி விசாரணை செய்வதே ஆகும்.
சிலருக்கு இந்த கடினத்தன்மை விளங்காது.

ஏனெனில் காணாமல் போனவரை உடனடியாக கண்டு பிடிக்க முடியாது.
நாம் கிடைக்கும் தகவல்களை கொண்டு விசாரணைகளை மேற்கொண்டே, உண்மையை கண்டறிய வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள இவ்வாறான அலுவலகங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதை, அனைவரும் அறிய வேண்டும்.
யாழ்ப்பணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட அலுவலகம், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக திறக்கப்பட்டதாக விமர்சிக்கின்றனர்.
ஆனால் அலுவலகம் ஆடம்பரமாக திறப்பது முக்கியமில்லை.

அத்துடன் சிலர் எம்மை அச்சுறுத்தும் வகையில், அலுவலகம் திறக்கக்கூடாது என அறிக்கை விட்டுள்ளனர்.  எப்படியும் அலுவலகம் திறந்து விட வேண்டும் என்றே நாம் திறந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!