மன்னாரில் பீடி இலைகள் மீட்பு!

மன்னார் மற்றும் தலை மன்னார் கடற்கரை பகுதிகளில் கடற்படையினர் நேற்று மாலை மேற்கொண்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது 574.5 கிலோ பீடி இலைகளை மீட்டுள்ளனர்.

கடற்படையினர் நடுக்குடா, சௌத்பார், ஓலைத் தொடுவாய் மன்னார், தலைமன்னார் ஆகிய கடற்கரை பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது தலைமன்னார் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய 10 மூட்டைகளை மீட்டதோடு, குறித்த மூட்டைகளில் இருந்த சுமார் 574.5 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி இலைகள் யாழ்ப்பாண சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!