அருண் ஜெட்லி காலமானார்!

இந்திய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது 66 ஆவது வயதில் இன்று காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாசப்பிரச்சனை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர் காலமானார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை அமைச்சராக அருண் ஜெட்லி பதவி வகித்திருந்தார்.

ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைபெற்றுவந்த அருண் ஜெட்லியின் உடல்நிலை நேற்றைய தினம் மிக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!