மன்னாரில் போதைப்பொருள் மீட்பு!

மன்னார் வங்காலை கடற்கரை பகுதியில் ‘கொக்கோயின்’ என சந்தேகிக்கப்படும் 983 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த போதைப்பொருள் கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து இன்று அதிகாலை வங்காலை கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, வங்காலை கடற்கரை பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றிற்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதி ஒன்றில் இருந்து கொக்கோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருள் வாங்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வங்காலை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.(நி) 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!