15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது!

நுவரெலியா மாவட்டம் நோர்வுட் பொலிஸ் பிரிவில், பொககெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டபகுதியில் 15 வயது சிறுமி குழந்தை ஒன்றை பிரவேசித்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவர் கினிகத்தேன பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்த விடயம் வெளியானதை தொடர்ந்து, சிறுமி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த அங்கு குழந்தையை பிரசவித்துள்ளார்.

குழந்தை குறை மாதத்தில் பிறந்த காரணத்தால் இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமி கர்ப்பம் தரித்து குழந்தை இறந்த விடயம் தொடர்பில் நோர்வுட் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில், சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர் திருமணமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யபட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த சிறுமி தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!