வடமராட்சி கிழக்கில் வெடிபொருட்கள் மீட்பு!

வடமராட்சி கிழக்கில் கடல் பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இணைந்து யாழ்ப்பாணம், ஆழியவளை கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின்போது வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பொதியில் 15 கிலோ வெடிபொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!