மதுபோதையில் வாகனம் செலுத்திய 10,054 சாரதிகள் கைது!

நாட்டில் கடந்த 49 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பத்தாயிரத்து 54 சாரதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமான விசேட நடவடிக்கையின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதிகளிடமிருந்து 261 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!