விசேட வர்த்தமானி வெளியீடு!

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கால, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் பாதுகாப்பு பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!