வெட்டு மரங்களை எடுத்துச்சென்ற கனரக வாகனசாரதி கைது!

கல்முனையில் ஆபத்தான முறையில் வெட்டு மரங்களை எடுத்து சென்ற கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கல்முனை போக்குவரத்து பொலிஸார், பெருந்தொகையான வெட்டு மரங்களை வாகனத்தில் ஏற்றிவந்த சாரதியை கைது செய்துள்ளனர்.

குறித்த வாகனத்தில் ஆபத்தான பொருட்களை ஏற்றிச்செல்லும் போது பாதசாரிகள் ஏனைய வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில் சிவப்பு நிறத்திலான சமிக்ஞையை காட்சிப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தை எடுத்து சென்ற கனரக வாகனசாரதி ஆபத்தை விளைவிக்கூடிய வகையில் வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காகவே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!