மட்டு, வாகனேரியில் ஆலய சுற்றுமதில் தூண்கள் விசமிகளால் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தியடி விநாயகர் ஆலயத்தில் கம்பெரலிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதில் தூண்கள் சில விசமிகளால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக, பிரதேச பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆலயத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுமதில் தூண்கள் சில உடைக்கப்பட்டதுடன், ஆலயத்தின் கற்பூரம் எரிக்கும் சட்டியை உடைத்துள்ளதுடன் ஆலய மூலஸ்தானத்தினுள் சிறுநீரகத்தினையும் எறிந்துள்ளதுடன், மூலஸ்தான நுழைவாயிலில் சீமெந்துகளை கொட்டிய செயற்பாடுகளை இன நல்லுறவை சீர்குலைக்கும் சில நாசகார விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் ஆலயத்தின் சுற்றுமதில் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கம்பெரலிய திட்டத்தில் நிதி ஓதுக்கப்பட்டு சுற்று மதிலுக்கான அத்திவாரம் அமைக்கும் பணி இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் ஆலய காணி எல்லை பிரச்சனை தொடர்பாக தீர்வு பெற்றதன் பின்னர் கட்டட வேலைகளை ஆரம்பிக்குமாறும், குறித்த கட்டட வேலைகள் தற்காலிகமாக இடை நிறுத்துமாறும் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளரால் நேற்று வியாழக்கிழமை மாலை உத்தரவு வழங்கப்பட்டதாக ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

இந் நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு சுற்றுமதில் அத்திவாரம் மற்றும் தூண்கள் சிலவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அத்திவாரத்துக்கு அருகில் கட்டை அமைத்து புதிதாக கம்பி வேலியும் நாட்டப்பட்;டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வாகனேரி ஸ்ரீ சித்தியடி விநாயகர் ஆலயத்தின் விக்கிரம் அருகில் காணப்படும் பற்றைக்குள் வீசப்பட்டும், ஆலயம் சேதமாக்கப்பட்டும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இச் சம்பவத்தினை தாம் வண்மையாக கண்டிப்பதாகவும் குறித்த குற்றத்தினை புரிந்த சந்தேக நபர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த ஆலயத்திற்கு ஓட்டாவடி பிரதேச சபை உறுப்பினர் வை.யோகேஸ்வரன். எஸ்.கிருபாகரன், கு.குணசேகரன் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!