மட்டு, செங்கலடியில் சட்டவிரொத மண் அகழ்வு : மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பிரதேச மக்கள் கிரவல் மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தமது உறுகாகமம் பிரதேசத்தில் கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி பெற்று காடுகளை அழித்தே கிரவல் மண் அகழப்படுவதாகவும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரதேச செயலாளர் கிரவல் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுகாமம் பிரதேசத்தில் குறித்த கிரவல் மண் அகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘நிறுத்து நிறுத்து அகழ்வை நிறுத்து’, ‘அதிகரிகளே பாராபட்சம் வேண்டாம்’, ‘எமது வளத்தை சூரையாடாதே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

காடுகளை அழித்து மண் அகழப்படுவதால் காடுகளினுள் இருந்து தற்போது யானைகள் தமது கிராமத்திற்குள் வருவதாகவும் தாம் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் தமது பிரச்ச்சினையில் கவனம் செலுத்துமாறும் இக் கிரவல் மண் அகழ்வினை நிறுத்துமாறும் ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!