பிரதமரின் ஆசிர்வாதத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் : மங்கள

ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது என, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று, மாத்தறை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கப் பெறும். சர்வாதிகார குடும்ப ஆட்சியை மீள தோற்றுவிக்க முடியாத அளவிற்கு, மஹிந்த ராஜபக்ஷவிற்கு படுதோல்வியை பெற்றுக் கொடுப்போம்.

1984 காலகட்டத்தில் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் மாத்தறை நகரில் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தொடக்கம் நடப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்கும், மாத்தறை நகரில் தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்றது.

ஆனால் இந்த மக்கள் சந்திப்பு பாரிய மக்கள் தொகையை கொண்டாக காணப்படுகின்றது.

நான்கு வருட ஆட்சி காலத்தில் அரசாங்கம் என்ன செய்தது என்று எதிரணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள்.

ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி இவை மூன்றையும் அரசாங்கம் முன்னிலைப்படுத்தி, அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து சென்றது.

பல நெருக்கடிகளுக்கு மத்தியிலே, அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை தொடர்ந்து முறையாக கொண்டு சென்றது. என தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, மாத்தறையில் நடைபெற்ற பேரணியில் பெருந்திரளான மக்கள் அணி திரண்டனர். குறித்த பேரணி, மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில், ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, முதலாவது பேரணி, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில், அண்மையில் பதுளை நகரில் நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் இரண்டாவது பேரணி, மாத்தறையில் நடத்தப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!