ஆட்சி மாற்றத்துடன் 19 ஆவது திருத்தச் சட்டமும் மாற்றப்பட வேண்டும் : ஹேரத்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், ஒரு குடும்பத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது என, பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகார போட்டியை ஏற்படுத்தியுள்ள அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முழுமையாக மாற்றியமைக்கப்படும்.

நாட்டின் நலன்களை கருத்திற்கொண்டு 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்படவில்லை. ஒரு குடும்பத்தை இல்லக்காக கொண்டே இத்திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியின் தேசிய மாநாடு, நாளை பிற்பகல் கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமைத்துவத்தில் இடம்பெறவுள்ளது.
என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!