கல்முனையில் நடமாடும் சேவை

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நிறுக்கும் அளக்கும் உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிடல் நடமாடும் சேவை இன்று நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளும் தங்களது நிறுக்கும் அளக்கும் உபகரணங்களுக்கு அரச முத்திரை பதித்திருக்க வேண்டும். அவ்வாறு முத்திரையிடப்படாத நிறுத்தலளவை உபகரணங்களை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு எதிராககடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய அம்பாறை மாவட்ட நிறுத்தலளவை திணைக்களம் பிரதேச ரீதியாக நடமாடும் சேவைகளை நடத்தி வருகின்றது. இதனொரு அங்கமாக இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வியாபார நிலையங்களின் வியாபாரிகளுக்கு முத்திரையிடும் நடவடிக்கை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமனங்கள் மற்றும் சேவைகள் பரிசோதகர் எஸ்.ஜீ.ஆர்.என்.லக்சிறி, உதவி பரிசோதகர் எம்.எல்.இப்ஹாம் உட்பட திணைக்கள ஊழியர்கள் கலந்து கொண்டு வியாபாரிகளின் நிறுத்தல் மற்றும் அளத்தல் உபகரணங்களுக்கு முத்திரையிட்டுக் கொடுத்தனர்.

கல்முனைப் பிரதேசத்தில் நடைபெற்ற இந் நடமாடும் சேவையில் 400 வியாபாரிகள் பயன்பெற்றுக் கொண்டதாக உதவி பரிசோதகர் இப்ஹாம் தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!