மட்டு, சித்தாண்டியில் நினைவுகூரப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

1990 காலப் பகுதியில்; மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய நலன் புரி முகாமில் வைத்து வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நினைவுகூரல் நிகழ்வு இன்று சித்தாண்டி முருகன் கோயில் ஆலய முன்றலில் நடைபெற்றது.

பிரதேசத்தின் சிவில் அமைப்புக்கள் மற்றும் குறித்த கோயில் கைதின் பின் முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது, காணாமல் ஆக்கப்பட்டோர்களின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மரநடுகையும் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட சர்வ மத பெரியோர்களிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரும் ஏற்பாட்டாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

1990 ஆண்டு காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடுரமான யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய நலன்புரி முகாமில் தஞ்சமடைந்தனர்.

அவ்வேளையில் ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திடிர் சுற்றி வளைப்புக்களில் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர் முகாமில் தஞ்சம் புகுந்த இளைஞர்கள், மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரை மூன்று தடவைகள் சுற்றி வளைப்பின் போது 99 பேரை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான இராணுவ முகமாக கருதப்பட்ட முறக்கொட்டான்சேனை இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்கள் இது வரை விடுவிக்கப்படவில்லை. இதனை வலியுறித்தி இவ் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

எனவே எமது பிரதேசத்தில் கைதின் பின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டமைக்கு இலங்கை நீதிப் பொறி முறை ஊடாக 29 வருடங்கள் கடந்தம் எந்த நீதியும் கிடைக்கப்பெறாத நிலையில் நாம் சர்வதேச நீதிப்பொறி முறையே அவசியமென வேண்டுகின்றோம். ஏன தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரில் தெரிவித்துள்னர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!