யாழில் ஆரம்பமான ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நடைமுறைப்படுத்தப்படும், ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்தில், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

7 நாட்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்து 500 வேலைத்திட்டங்கள், யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், இன்று ஊர்காவற்துறை பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் கலந்துகொண்டார்.

இதன் போது, ஊர்காவற்றுறை மக்களின் குடி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக 11 ஆயிரம் லீற்றர் கொள்ளவுள்ள நீர்த்தாங்கி வாகனம் ஒன்று, பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டதுடன், நீர்த்தாங்கிகளும் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அனலைதீவு மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, கருவாடு பதனிடும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விலும், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!