இந்திய குழுவின் பரத நடன அரங்கேற்றம்

இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினம் மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு, இலங்கை வந்துள்ள இந்தியா பரத நாட்டிய கலைஞர் குழுவின் விசேட பரத நடன அரங்கேற்றம், கண்டியில் உள்ள, மத்திய மாகாண இந்து கலாசார மண்டபத்தில், நேற்று இடம்பெற்றது.

கண்டி உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், இந்திய உதவி உயர்ஸ்தானிகர் நெரந்திர சிங்க தலைமையில், நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில், கண்டி மாநகர பிரதி முதல்வர், மத்திய மாகாண கல்யாண சில்கா நடனக்கலை அமைப்பின் தலைவர் பி.டி.ராஜன், மத்திய மாகாண இந்து கலாசார மண்டபத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது, இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்களின், பல்வேறு பரத நாட்டிய நடனங்கள் அரங்ககேற்றப்பட்டன.

அத்துடன், வருகை தந்த கலைஞர்கள், விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். (சி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!